திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ஜப்பான் இடையேயான நல்லுறவு தொழில்துறை வளர்ச்சிக்கு வலுசேர்க்கிறது: மத்திய அமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி

प्रविष्टि तिथि: 14 AUG 2026 5:33PM by PIB Chennai

இந்தியா - ஜப்பான் இடையேயான நல்லுறவு தொழில்துறை வளர்ச்சிக்கு வலுசேர்ப்பதாக மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவு இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதுடன் வேலைத் தேடும் இளைஞர்களுக்கு பொருத்தமான தொழில்நுட்பத் திறன், மொழித் திறன், பணியிடச்சூழல் குறித்த புரிதல் போன்றவற்றிலும் போதிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான திறன் மேம்பாடு, பணியாளர் இடம்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. கடந்த 2025-ம் ஆண்டில் நடைபெற்ற இந்தியா – ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாட்டின் போது வெளியிடப்பட்ட மனிதவளப் பரிமாற்றம் ஒத்துழைப்பிற்கான செயல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இளைஞர்களுக்கு தொழில்துறைச் சார்ந்த பயிற்சி அளிப்பது ஜப்பானிய மொழி, கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையேயான நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் ஜப்பானில் உள்ள வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில் இந்திய இளைஞர்களை தயார்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் ஜப்பானில் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு பெற்ற இந்திய இளைஞர்களின் அனுபவங்களை எடுத்துரைக்கும் ஒலி-ஒளிக் காட்சியும் இடம் பெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299485&reg=3&lang=1

****

TV/SV/GS/SH


(रिलीज़ आईडी: 2299689) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Malayalam