குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தேசப் பிரிவினை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட நாகரிகப் பாரம்பரியத்தைப் பிரித்தது : குடியரசு துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 6:08PM by PIB Chennai

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கவுன்சலுடன் இணைந்து தில்லி பல்கலைக்கழகத்தின் சுதந்திரம், பிரிவினை ஆய்வுகள் மையம் ஏற்பாடு செய்திருந்த, பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (14.08.2026) உரையாற்றினார். 'இந்தியப் பிரிவினை - இடம்பெயர்வு, பிரிவினை, மீள்குடியேற்றம்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கு, இந்தியப் பிரிவினையின் (1947) வரலாற்றை மையமாகக் கொண்டிருந்தது.

 

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், கருத்தரங்கில் கலந்துகொண்ட, பிரிவினையின்போது உயிர் பிழைத்தவர்களுக்குத் தமது மரியாதையைத் தெரிவித்தார். தேசத்தின் வரலாற்றில் மிகவும் சோகமான, மனிதாபிமானமற்ற அத்தியாயங்களில் ஒன்றைப் பற்றி சிந்திப்பதற்காக நாடு கூடியுள்ளது என்று அவர் கூறினார்.

 

பிரிவினையை நினைவுகூர்வதன் நோக்கம், பழைய காயங்களைக் கசப்புடன் மீண்டும் கிளறுவதல்ல எனவும், மாறாக, மேலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நோக்கி நகர்வதே என்றும் அவர் கூறினார். பாரதம் சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகும் வேளையில், பிரிவினையின்போது வாழ்ந்தவர்களின் தியாகங்களையும் துன்பங்களையும் நினைவுகூர்ந்து, தேசம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

சுதந்திரம் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலையைக் கொண்டுவந்தாலும், அது முன்னெப்போதும் இல்லாத ஒரு துயரத்தையும், மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய மக்கள் இடம்பெயர்வுகளில் ஒன்றையும் உடன் கொண்டுவந்தது என்று திரு சி.பி. ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார். தேசப் பிரிவினை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட நாகரிகப் பாரம்பரியத்தைப் பிரித்தது என்றும் அவர் கூறினார்.

 

இந்நிகழ்வின் போது, பிரிவினையின் போது உயிர் பிழைத்து, தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் 15 பேரை குடியரசு துணைத் தலைவர் கௌரவித்தார். இக்கருத்தரங்கில், தில்லி பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங், கல்வியாளர்கள், அறிஞர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2299503&reg=3&lang=1

(Release ID : 2299503)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299688) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati