சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
குளிர்கால, பருவக்கால உள்ளகப் பயிற்சித் திட்டத்திற்கான சேர்க்கையை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தொடங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
14 AUG 2026 4:11PM by PIB Chennai
எதிர்கால தொழில் வல்லுநர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், 2026-27-ம் ஆண்டுக்கான குளிர்காலப் பயிற்சித் திட்டம், 2027-ம் ஆண்டுக்கான பருவக்காலப் பயிற்சித் திட்டம் ஆகியவற்றிற்கான மாணவர் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. முறையே டிசம்பர் 2026 முதல் ஜனவரி 2027 வரையிலும், ஜனவரி முதல் ஜூன் 2027 வரையிலும் செயல்படுத்தப்படவுள்ள இத்திட்டங்கள், அனுபவம் வாய்ந்த தொழில் வல்லுநர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாணவர்களுக்கு சிறந்த செய்முறை அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
பயிற்சியாளர்கள், தற்போது நடைபெற்று வரும் 125 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களிலும், அத்துடன் பல்வேறு பிரிவுகளிலும் பணியமர்த்தப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட பயிற்சியாளர்கள், ஆணைய அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் பணியாற்றுவார்கள். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை தொடர்பான திட்டமிடல், கட்டுமானம், செயல்பாடு, பராமரிப்பு, சொத்து மேலாண்மை, சாலைப் பாதுகாப்பு, சட்டம், நிதி, ஊடகம், பிற செயல்பாட்டுகளில் செய்முறை அனுபவத்தைப் பெறுவார்கள்.
விண்ணப்ப செயல்முறை, https://internshipsatnhai.digitalindiacorporation.in/ என்ற பிரத்யேக உள்ளகப் பயிற்சி இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும்.
விருப்பமுள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை 20 அக்டோபர் 2026 -க்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299419®=48&lang=2
(Release ID : 2299419)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299668)
வருகையாளர் எண்ணிக்கை : 41