விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிபிடிசி அடிப்படையிலான நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டத்தை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் சண்டிகரில் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:53PM by PIB Chennai

சண்டிகரில், பஞ்சாப் ஆளுநர் திரு குலாப் சந்த் கட்டாரியா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் இன்று (14.08.2026) மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC-சிபிடிசி) அடிப்படையிலான நேரடிப் பணப் பரிமாற்ற முறையைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், மத்திய  உணவு அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பொது விநியோக அமைப்பில் அதிக வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு, காலந்தவறாமையைக் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியப் படியாக இந்த முயற்சி அமைந்துள்ளது என்று திரு சிவராஜ் சிங் சௌஹான் கூறினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையலும் வழிகாட்டுதலும், விவசாயிகள், ஏழைகளின் நலன்களில் எந்த சமரசமும் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய வங்கி டிஜிட்டல் நாணய (CBDC) அடிப்படையிலான நேரடிப் பணப் பரிமாற்ற முறையானது, ரேஷன், உணவு தானியங்களுக்கான பரிவர்த்தனைகளைப் பயனாளிகளுக்கு நேரடியாக, பாதுகாப்பாக, வெளிப்படையாகச் சென்றடைய உதவும் என்று திரு சிவராஜ் சிங் சௌஹான் கூறினார். சண்டிகரில் தொடங்கப்பட்ட இந்த முன்னோட்டத் திட்டம், நாடு முழுவதும் ஒரு மாதிரியாகச் செயல்படும் என்று அவர் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299407&reg=3&lang=1

(Release ID : 2299407)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2299665) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati