PIB Backgrounder
azadi ka amrit mahotsav

மகளிருக்கு அதிகாரமளித்தல்: இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் மகளிர் சக்தியின் பங்கு

प्रविष्टि तिथि: 14 AUG 2026 3:56PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்கள் பயனாளிகளாக மட்டுமின்றி நாட்டின் முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய ஆற்றலாக உருவெடுத்துள்ளனர். பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, சுகாதாரம், ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள், டிஜிட்டல் இணைப்பு மூலமாகப் பெண்களின் நிதிப் பாதுகாப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. சுகாதாரம், இருப்பிடம், தூய்மையான எரிபொருள், குழாய் மூலம் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் பெண்களின் கௌரவத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளன.

தாய்-சேய் பராமரிப்பு சேவைகள் மேம்படுத்தப்பட்டு பிரதமரின் மகப்பேறு திட்டத்தின் கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளின் இடைநிற்றலைக் குறைக்கவும் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கவும் தேசிய கல்விக் கொள்கை 2020 வழிவகை செய்துள்ளது. திறன் இந்தியா இயக்கத்தின் கீழ் குறுகிய காலப் பயிற்சிகள் வழங்கப்படுவதோடு, தொழிற்கல்வியில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் கோடிக்கணக்கான பெண்களுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டு இலவசச் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

பெண்களுக்கு நிதிச் சுதந்திரம் வழங்கும் நோக்கில் செல்வமகள் சேமிப்புத் திட்டம், பிரதமரின் முத்ரா திட்டம், ஸ்வநிதி போன்ற திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக முத்ரா திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கடன்கள் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன. லட்சாதிபதி சகோதரி திட்டத்தின் மூலமாக சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த கோடிக்கணக்கான பெண்கள் நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ளனர். நமோ டிரோன் சகோதரி திட்டம் கிராமப்புறப் பெண் விவசாயிகளுக்கு நவீன விவசாயத் தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக சக்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு ஒருங்கிணைந்த ஒருங்கிணைந்த சேவை மையங்கள் போன்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் பெண்களின் பெயரிலோ அல்லது அவர்களின் பெயரில் இணைந்தோ இருக்கும் வகையில் வழங்கப்பட்டு அவர்களின் இருப்பிடத்திற்கான உரிமை நிலைநிறுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் சட்டங்கள் நாட்டின் கொள்கை உருவாக்கும் அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்துள்ளன. அரசின் இத்தகைய பன்முகத் திட்டங்கள் மகளிர் சக்தியை இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அடித்தளமாக மாற்றி அமைத்துள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299409&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2299663) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Bengali , Gujarati