பாதுகாப்பு அமைச்சகம்
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 16 பதக்கங்கள் வென்ற இந்திய ராணுவக் குழுவினருடன் பாதுகாப்பு அமைச்சர் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
14 AUG 2026 3:31PM by PIB Chennai
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் அண்மையில் நிறைவடைந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் 8 தங்கம், 7 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 16 பதக்கங்களை வென்ற இந்திய ராணுவக் குழுவினருடன் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் புதுதில்லியில் இன்று (14 ஆகஸ்ட் 2026) கலந்துரையாடினார். காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா வென்ற மொத்த 39 பதக்கங்களில், இந்திய பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் 18 பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களை முறியடித்து சர்வதேச அரங்கில் சாதித்த வீரர்களின் மன உறுதியைப் பாராட்டினார். இந்த விளையாட்டு வீரர்கள் வீரம் மிகுந்தவர்களாகவும், தலைசிறந்த வெற்றியாளராகவும் திகழ்ந்து இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்குவதாகக் குறிப்பிட்டார். குத்துச்சண்டை வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை வென்றிருப்பது நாட்டின் வளர்ந்து வரும் மகளிர் சக்தியின் சான்றாகும் என்று கூறிய அவர், இச்சாதனை விளையாட்டுத் துறையிலும், பாதுகாப்புப் படைகளிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் என்றார். விளையாட்டுத் துறை அனைவருக்கும் பொதுவானதாக மாறியுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், ஆசிய விளையாட்டுகள், ஒலிம்பிக் போன்ற போட்டிகளிலும் வீரர்கள் சிறந்து விளங்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299394®=48&lang=2
****
TV/PD/SH
(रिलीज़ आईडी: 2299625)
आगंतुक पटल : 6