வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகளாவிய சந்தைகளை விரிவுபடுத்த, திறன் வாய்ந்த சரக்கு போக்குவரத்து மேலாண்மை முக்கியமானது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 14 AUG 2026 2:03PM by PIB Chennai

லாஜிஸ்டிக்ஸ் டேட்டா பேங்க் (எல்டிபி) எனப்படும் சரக்குப் போக்குவரத்து தரவு வங்கி 2016-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து 10 கோடி ஏற்றுமதி - இறக்குமதி கொள்கலன்களைக் கண்காணித்துள்ளது. இந்தத் தளம், தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மூலம் நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதி-இறக்குமதி கொள்கலன்களின் போக்குவரத்தைக் காணும் வசதியை வழங்குகிறது. சரக்கு போக்குவரத்து தரவு வங்கி, இந்த கட்டமைப்பு முழுவதும் வெளிப்படைத்தன்மையை வழங்குவதோடு, சரக்கு கொள்கலன் போக்குவரத்துக் கண்காணிப்பை எளிதாக்கி, சம்பந்தப்பட்ட தரப்பினருக்குத் தகவல்களை வழங்குகிறது.

சரக்குப் போக்குவரத்துத் தரவு வங்கி தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல்  சரக்குப் போக்குவரத்துத் தரவு வங்கி மூலம் 10 கோடி கொள்கலன்களைக் கண்காணிப்பது, இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றார். சரக்குப் போக்குவரத்தை எளிமையாகவும், வேகமாகவும், மேலும் திறன் வாய்ந்த்தாகவும் மாற்றுவதற்கு தொழில்நுட்பம் உதவுவதோடு, இந்தியத் தொழில்துறையின் போட்டித்திறனையும் மேம்படுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். உலகளாவிய சந்தைகளில் நமது இருப்பை விரிவுபடுத்துவதற்கு இது முக்கியமாக அமையும் என்று திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.

எல்டிபி, ஒவ்வொரு மாதமும் சராசரியாக 1.5 கோடிக்கும் அதிகமான கொள்கலன் தேடல்களை மேற்கொள்கிறது. அதன் கொள்கலன் கண்காணிப்புச் சேவைகள் www.ldb.co.in என்ற ஒற்றைச் சாளரத் தளம் வழியாகக் கிடைக்கின்றன. இது சம்பந்தப்பட்டவர்கள் கொள்கலன்களைக் கண்காணிக்க உதவுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299348&reg=48&lang=2

***

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2299555) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati