தேசிய மனித உரிமைகள் ஆணையம்
ஹரியானாவில் நச்சு வாயு தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
प्रविष्टि तिथि:
14 AUG 2026 12:30PM by PIB Chennai
ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டம் செக்டார்-25 பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவால் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்சனை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஹரியானா மாநில தலைமைச் செயலாளர், ஃபரிதாபாத் காவல் ஆணையர் ஆகியோருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் விசாரணை நிலவரம், காயமடைந்த நபரின் உடல்நிலை குறித்தும், பாதிக்கப்பட்ட நபர், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஏதேனும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299319®=48&lang=1
***
SS/PD/SH
(रिलीज़ आईडी: 2299551)
आगंतुक पटल : 6