தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் விடுதியில் பாம்பு கடித்து மாணவிகள் உயிரிழந்த விவகாரம்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை

प्रविष्टि तिथि: 14 AUG 2026 12:28PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின ஆசிரமப் பள்ளி விடுதியில் தங்கியிருந்த 6 மாணவிகளைப் பாம்பு கடித்ததில் மூன்று மாணவிகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. போதிய கட்டில் வசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவிகள் விடுதி அறையின் தரையில் படுத்து உறங்கியதால் இச்சம்பவம் நிகழ்ந்ததாகவும்பாதிக்கப்பட்டவர்களில் எஞ்சிய மூன்று மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில், இது மனித உரிமை மீறல் சார்ந்த பிரச்சனை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு மகாராஷ்டிரா மாநில தலைமைச் செயலாளருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை, அவர்களின் தற்போதைய உடல்நிலை குறித்த விவரங்களும் இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2299316&reg=48&lang=2

***

SS/PD/SH


(रिलीज़ आईडी: 2299549) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi