பாதுகாப்பு அமைச்சகம்
ஐஓஎல் நிறுவனம், உயர் தெளிவுத்திறன் கொண்ட பைனாகுலர்களை அறிமுகப்படுத்தியுள்ளது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 4:56PM by PIB Chennai
பாதுகாப்பு உற்பத்தித் துறையின் கீழ் இயங்கும், மினி ரத்னா பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனமான இந்தியா ஆப்டெல் லிமிடெட் (ஐஓஎல் - IOL), உள்நாட்டுத் தயாரிப்பான 'கருட்' உயர் தெளிவுத்திறன் கொண்ட பைனாகுலரை பொதுப் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியா ஆப்டெல் லிமிடெட்டின் ஒரு பிரிவான டேராடூனில் உள்ள ஆயுதத் தொழிற்சாலையால் உருவாக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட 'கருட்', உள்நாட்டு வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றின் மூலம் 'தற்சார்பு பாரதம்' என்பதற்கு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான ஒளியியல் உற்பத்தியில் ஒரு செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்த நிறுவனத்தின் 'கருட்' தயாரிப்பு, நிரூபிக்கப்பட்ட பாதுகாப்புத் தர நிபுணத்துவத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைத்து, பொதுப் பயனர்களுக்கு நம்பகமான, உயர்தர ஒளியியல் செயல்திறனை வழங்குகிறது.
கருட் 8 மடங்கு உருப்பெருக்கத்தையும், 7.6 டிகிரி அகலமான பார்வைப் புலத்தையும் வழங்குகிறது. இது பரந்த பார்வைக் கோணத்தைத் தக்கவைத்துக்கொண்டு, தொலைவில் உள்ள பொருட்களைத் தெளிவாகக் காண உதவுகிறது.
இது இன்று (ஆகஸ்ட் 13, 2026) புது தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில், பாதுகாப்பு உற்பத்தித் துறை, இளைஞர் விவகாரங்கள் - விளையாட்டு அமைச்சகம், மத்திய ஆயுதக் காவல் படைகள், மூத்த அதிகாரிகள், ஐஓஎல் நிறுவனத்தின் இயக்குநர் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298964®=3&lang=1
(Release ID : 2298964)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2299261)
आगंतुक पटल : 6