ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் 75 சதவீத கிராமப்புற குடியிருப்புகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
13 AUG 2026 4:49PM by PIB Chennai
சுஜல் கான் என்னும் தனித்துவ அடையாள எண் ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் நிர்ணயிக்கப்பட்ட தர நிலைகள், அளவுகோல்கள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் குடிநீர் விநியோகப் பகுதிகளுக்கு அளிக்கப்படுகிறது. இந்த அடையாள எண் ஜல் ஜீவன் இயக்கத்தின் டிஜிட்டல் தளம் மூலம் வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் ஜல் ஜீவன் இயக்கம் டிஜிட்டல் கட்டமைப்பு மூலம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
கிராமப்புற குடிநீர் விநியோகம், அதன் நிலைத்தன்மை ஆகியவற்றில் இலக்குகளை எட்டியுள்ள பகுதிகளை அடையாளம் காணுதல், கண்காணித்தல், அறிக்கை வழங்குதல், சரிபார்த்தல் ஆகியவற்ற எளிதாக்குவது சுஜல் கான் என்ற அடையாள எண்ணின் நோக்கமாகும்.
2026 ஆகஸ்ட் 10-ந் தேதி நிலவரப்படி நாட்டிலுள்ள 16,96,213 குடியிருப்புகளில் 12,67,808 குடியிருப்புகளுக்கு (75 சதவீதம்) சுஜல் கான் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை ஜல் சக்திதுறை இணையமைச்சர் திரு வி சோமண்ணா மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298959®=3&lang=1
****
TV/IR/PS/SH
(रिलीज़ आईडी: 2299255)
आगंतुक पटल : 6