உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பில் தேசியக் கொடிப் பேரணி - மத்திய அமைச்சர் திரு ராம் மோகன் நாயுடு தொடங்கி வைத்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 AUG 2026 2:18PM by PIB Chennai
ஹர் கர் திரங்கா பிரச்சாரம் 2026 எனப்படும் இல்லம் தோறும் தேசியக்கொடி இயக்கத்தின் கீழ், சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (13.08.2026) தேசியக் கொடி பேரணி ஒன்றை தில்லியில் ஏற்பாடு செய்தது. சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு முரளிதர் மோஹல், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் செயலாளர் திரு சமீர் குமார் சின்ஹா, அமைச்சகத்தின் அதிகாரிகள், பணியாளர்கள் முன்னிலையில் இந்தப் பேரணியை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பங்கேற்பாளர்களால் “வந்தே மாதரம் ” பாடப்பட்டு கொண்டாட்டங்கள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு மூவண்ணக் கொடிப் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அமைச்சகம், அதன் இணைக்கப்பட்ட அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளின் அதிகாரிகள், பணியாளர்கள் தேசியக் கொடியை ஏந்தியபடி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.
இந்தப் பேரணி உடான் பவனிலிருந்து ராஜீவ் காந்தி பவனில் உள்ள விமானப் பூங்காவை நோக்கிச் சென்றது. இந்தப் பேரணியில் அதிகாரிகளும் பணியாளர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298824®=3&lang=1
(Release ID : 2298824)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2299234)
வருகையாளர் எண்ணிக்கை : 48