விண்வெளித்துறை
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்கள்
प्रविष्टि तिथि:
13 AUG 2026 2:04PM by PIB Chennai
உள்நாட்டு தொழில் வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி-ன் ஸ்டார்ட்-அப் இந்தியா தளத்தின்படி , இந்தியாவில் சுமார் 440 விண்வெளி தொழில்நுட்ப புத்தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன் - ஸ்பேஸ், பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 52 அரசு சாரா நிறுவனங்களுக்கு 113 அங்கீகாரங்களை வழங்கியுள்ளது, அவற்றில் 18 நிறுவனங்கள் புத்தொழில் நிறுவனங்களாகும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளங்கள் உட்பட இஸ்ரோவின் உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதற்கும் அணுகுவதற்குமான விண்ணப்பங்கள், இன்-ஸ்பேசின் டிஜிட்டல் தளத்தில் பெறுப்படுகின்றன. அதன் தயார்நிலை அம்சங்கள் இன்-ஸ்பேசின் நிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.
விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298799®=3&lang=1
----
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299138)
आगंतुक पटल : 9