பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
வழக்குகள் இல்லாத ஓய்வூதியச் சூழலமைப்பு
प्रविष्टि तिथि:
13 AUG 2026 1:21PM by PIB Chennai
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், பிற ஓய்வுக்காலப் பலன்கள் தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்கான ஒருங்கிணைப்புத் துறையாக ஓய்வூதியம், ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விளங்குகிறது. ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு கண்காணிக்கும் அனைத்து அமைச்சகங்கள் / துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோரிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், அவர்களின் திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வழக்குகளைக் குறைத்துத் திறம்பட, செயல்திறனுடன் நிர்வகிப்பது குறித்த அரசின் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகிறது. இது தொடர்பாக 2-வது தேசியப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. ஓய்வூதிய வழக்குகளைக் குறைப்பதற்கான சிறந்த நடைமுறைகள், அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல்களும் விளக்கங்களும் இதில் இடம்பெற்றன.
ஓய்வூதிய வழக்குகள் எந்தவொரு துறையாலும் மையப்படுத்தப்பட்ட முறையில் கையாளப்படுவதில்லை. மாறாக, மத்திய அரசின் சார்பாக அனைத்துத் துறைகளாலும் தனித்தனியாகக் கையாளப்படுகின்றன. வழக்குகளைக் குறைப்பதற்காக, சிறப்பு இயக்கம்-3 தொடங்கப்பட்டது. இதில், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகள்/கோரிக்கைகள், பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த இயக்கம், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள குறைகள் தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையேயான ஆய்வுக் கூட்டங்கள் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறது. இது பிற முயற்சிகளுடன் இணைந்து, குறைகளைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும். இதன் மூலம், நீதிமன்றங்களை அணுக வேண்டிய தேவையைத் தவிர்த்து, வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நிலை ஏற்படுகிறது.
பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் கோரிய விளக்கங்கள், ஆலோசனைகளின் அடிப்படையில், ஓய்வூதியதாரர்கள், குறிப்பாக மூத்த ஓய்வூதியதாரர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணியாளர் நலன், ஓய்வூதியம், பொது மக்கள் குறைதீர்ப்பு, நிர்வாக சீர்திருத்தங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று (13.08.2026) மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298775®=3&lang=1
***
SS/PLM/SH
(रिलीज़ आईडी: 2299136)
आगंतुक पटल : 9