ரெயில்வே அமைச்சகம்
ரயில் பாதைகளில் அத்துமீறுவதைத் தவிர்க்கவும் பாதுகாப்பை உறுதி செய்யவும் 19,700 கி.மீ தூரத்திற்குப் பாதுகாப்பு வேலி!
प्रविष्टि तिथि:
12 AUG 2026 4:59PM by PIB Chennai
ரயில்வே செயல்பாடுகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளித்து வரும் இந்திய ரயில்வே, கால்நடைகள், பாதசாரிகள் மற்றும் சிறு வாகனங்கள் ரயில் பாதையைக் கடப்பதைத் தவிர்க்க 19,700 கி.மீ தூரத்திற்குப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளது. பீகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய வழிகளில் இவை அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்கள் மீது கல்வீசும் சமூக விரோதிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரயில் பாதை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில் நடத்தப்படுகின்றன. மேலும், ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ரயில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மாநிலப் தலைமை காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில அளவிலான பாதுகாப்புக்குழு மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன.
இத்தகவலை ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இன்று மக்களவையில் கேள்வி ஒன்றிற்குப் பதிலளிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298361®=3&lang=1
செய்தி அடையாள எண் 2298361
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2298679)
आगंतुक पटल : 10