சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டாக்டர் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ் 457 பயனாளிகளுக்கு ரூ.10.66 கோடி நிதி உதவி: மத்திய இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே

प्रविष्टि तिथि: 12 AUG 2026 2:48PM by PIB Chennai

டாக்டர் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 457 பயனாளிகளுக்கு ரூ.10.66 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்த அவர், சாதி மறுப்புத் திருமணங்கள் மூலமான சமூக நல்லிணக்கத் திட்டங்கள் உரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இத்திட்டங்களின் கீழ் தகுதியான பயனாளிகளுக்கு நேரடி நிதி உதவிகள் வழங்கப்படுவதாகவும், கடந்த ஆண்டுகளில் நிலுவையில் இருந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்படி மாநில வாரியாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சமூக சமத்துவத்தை நிலைநிறுத்தத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தனது பதிலில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298179&reg=3&lang=1

****

TV/PD/SH


(रिलीज़ आईडी: 2298672) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada