உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2027 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 12 AUG 2026 4:52PM by PIB Chennai

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமான வீட்டு பட்டியல், வீட்டுவசதிக் குறித்த கணக்கெடுப்புப் பணி 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த முதல் கட்டப் பணி 2026 செப்டம்பருக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.  இந்திய அரசிதழில் 2026 ஆகஸ்ட் 3 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையின் படி, கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி லடாக் யூனியன் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பனி படர்ந்த பகுதிகள், இமாச்சலப் பிரதேசம், உத்ராகண்ட் மாநிலங்களில் பனி படர்ந்த பகுதிகளில் 2026 செப்டம்பர் 1 முதல் 30-ம் தேதி வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து 2026 அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை மறு ஆய்வு சுற்று நடைபெறும்.  அத்துடன் 2026 ஆகஸ்ட் 15 முதல் 31-ம் தேதி வரை சுய கணக்கெடுப்பு வசதியும் அளிக்கப்படும்.

இத்தகவலை, மத்திய உள்துறை இணையமைச்சர் திரு நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2298340&reg=3&lang=1

****

TV/IR/SU/SH

 


(रिलीज़ आईडी: 2298571) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati