மாநிலங்களவைச் செயலகம்
அவையில் உறுப்பினர்கள் உரையாற்றும்போது குறுக்கிட்டு கண்ணியமற்ற, தகுதியற்ற கருத்துகளை தெரிவிப்பது குறித்து மாநிலங்களவைத் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
12 AUG 2026 12:42PM by PIB Chennai
அவைத்தலைவர்: மாண்புமிகு உறுப்பினர்களே, அவையில் பிற உறுப்பினர்கள் உரையாற்றும்போது குறுக்கிட்டு கண்ணியமற்ற, தகுதியற்ற கருத்துகளை தெரிவிப்பது குறித்து என் கவனத்திற்கு வந்துள்ளது. சக உறுப்பினர்களின் மனதையும், உணர்வுகளையும், புண்படுத்தாமல் மாண்புமிகு உறுப்பினர்கள் கவனமுடன் செயல்பட வேண்டுமென்று நான் அறிவுறுத்துகிறேன். நமது கலாச்சாரம் தனித்துவமிக்கது, அது பல்வேறு பிராந்திய கலாச்சாரங்களை உள்ளடக்கியதாகும். நம்முடைய சக உறுப்பினர்களின் கலாசார பாரம்பரியங்கள், பிராந்திய அடையாளங்கள் ஆகியவற்றுக்கு எந்த அவமரியாதையும் நிகழக்கூடாது.
***
(Release ID: 2298076)
SS/IR/SU/SH
(रिलीज़ आईडी: 2298505)
आगंतुक पटल : 11