சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரத்தசோகையை எதிர்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:36PM by PIB Chennai

ரத்தசோகை நோயை எதிர்கொள்வது குறித்து 2026 ஜூன் 29 அன்று மத்திய சுகாதாரம், குடும்பநல குழுமத்தின் 16-வது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, ரத்தசோகை இல்லா இந்தியா திட்டத்தின் புதிய உத்தியின் கீழ் செயல்பாட்டு வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

பயனாளிக் குழுவின் அடிப்படையில் டிஜிட்டல் இன்வேசிவ் ஹிமோகுளோபினோமீட்டரைப் பயன்படுத்தி பல்வேறு தளங்களில் ஹீமோகுளோபின் செறிவூட்டல் பரிசோதனை செய்தல்.

கண்டறியப்பட்ட ரத்தசோகை வகைக்கேற்ப நோய்த் தடுப்பு, இலக்கு சார்ந்த சிகிச்சை மேலாண்மை

உரிய நோயாளியைக் கண்டறிவதற்காக ஊட்டச்சத்துமிக்க ரத்தசோகை, ஊட்டச்சத்து அல்லாத ரத்தசோகையைப் பிரித்தல்.

பரிசோதனை, சிகிச்சை, உரையாடல் என்ற மூன்று அணுகு முறையிலிருந்து பரிசோதனை, சிகிச்சை, உரையாடல், கண்காணித்தல் என்ற நான்கு அணுகு முறைக்கு மாறுதல்

சரியான உணவு அணுகு முறையுடன் உணவு பன்முகப்படுத்துதல், உள்ளூரில் கிடைக்கக்கூடிய இரும்புச்சத்துமிக்க உணவுகளை அன்றாட அடிப்படையில் ஊக்குவித்தல் உள்ளிட்டவை ரத்தசோகை இல்லா இந்தியா இயக்கத்தின் அம்சங்களாகும்.

இதில், 6 முதல் 59 மாதங்களுடைய குழந்தைகள், 5 முதல் 9 வயதுடைய குழந்தைகள், 10 முதல் 19 வயதுடைய வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 20 முதல் 49 வயதுடைய கருத்தரிக்க தகுதியுடையவர்கள், 0 முதல் 6 மாதங்கள் வரையிலான குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகள் ஆகிய ஏழு வகையினர் பயனாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை, மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297512&reg=3&lang=1

 

***

SS/IR/PS/SH

 


(रिलीज़ आईडी: 2297886) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu