சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாதவிடாய் சுகாதாரத்திற்காக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன - மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல்

प्रविष्टि तिथि: 11 AUG 2026 1:35PM by PIB Chennai

மாதவிடாய் சுகாதாரம், தூய்மை மேலாண்மை என்பது பன்முகத்தன்மை கொண்ட மற்றும் அமைச்சகங்களுக்கு இடையேயான விவகாரமாகும். இதற்காக, தொடர்புடைய பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், மாநிலங்கள், யூனியன் பிரசேங்கள் ஆகியவற்றின் சட்டப்பூர்வமான ஆணைகளுக்கேற்ப ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தங்களுடைய வருடாந்திர செயல்முறை திட்டங்களின் பரிந்துரைகள் அடிப்படையில் ஒழுங்குமுறை விதிமுறைகளின்படி மாதவிடாய் சுகாதார திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.

சுகாதாரம், குடும்ப நல அமைச்சகம் வளரிளம் பெண்கள் இடையே மாதவிடாய் சுகாதாரத்தை மேம்படுத்த மாதவிடாய் சுகாதாரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இத்திட்டம், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் தரமான, குறைந்த விலையிலான சானிட்டரி நாப்கின்கள் கிடைப்பதை உறுதிசெய்தல், பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் கழிவுகளை அகற்றுதல், பாதுகாப்பான மாதவிடாய் நடைமுறைகள் தொடர்பான ஆலோசனை வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

பள்ளி மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரக் கொள்கை, தொடர்புடைய அமைச்சகங்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலம் அமல்படுத்தப்படுகிறது. இதனால் பாதுகாப்பான, பயன்மிக்க, மாதவிடாய் சுகாதார வசதிகள் பள்ளிகளில் கிடைக்கிறது.

இத்தகவலை, மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேல் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297511&reg=3&lang=1

 

***

SS/IR/PS/SH

 


(रिलीज़ आईडी: 2297884) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR