கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா ஸ்டார்ட்அப் மற்றும் கண்டுபிடிப்பு திட்டம் குறித்து மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
प्रविष्टि तिथि:
11 AUG 2026 3:47PM by PIB Chennai
இந்தியக் கடல்சார் துறையில் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழிலமுனைவோர் சூழலை உருவாக்கும் நோக்கில் 'சாகர்மாலா ஸ்டார்ட்அப் மற்றும் கண்டுபிடிப்பு திட்டம்' (S2I2) 2025 மார்ச் 19 அன்று தொடங்கப்பட்டது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 'மேரிடைம் இந்தியா பவுண்டேஷன்' (MIF) அமைப்பு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தொழில்நுட்ப மேம்பாடு, சோதனை, திறன் மேம்பாடு மற்றும் புதுமையான தீர்வைக் கண்டறியும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கச் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, கரக்பூர் ஐஐடி மற்றும் சென்னயில் உள்ள இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) ஆகியவற்றில் 'கடல்சார் கண்டுபிடிப்பு மையங்கள்' (MIHs) அமைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம் மற்றும் சென்னை ஐஐடியின் 'துறைமுகங்கள், நீர்வழிகள் மற்றும் கடலோரங்களுக்கான தேசிய தொழில்நுட்ப மையம்' இணைந்து இந்தியாவின் முதல் கடல்சார் ஹேக்கத்தானான 'MAR-a-THON 2025' நிகழ்வைச் சென்னை ஐஐடியில் நடத்தின. துறைமுக உள்கட்டமைப்பு, பசுமை கடல்சார் துறை, கப்பல் கட்டுதல் உள்ளிட்ட 6 முக்கியப் பிரிவுகளில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, கடல்சார் துறையின் சவால்களுக்குத் தீர்வுகாண 36 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் 40 திட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
விசாகப்பட்டினம் துறைமுகம் அடையாளம் கண்ட 4 குறிப்பிட்ட சவால்களுக்குத் தீர்வுகாண அம்மாநிலத்தைச் சேர்ந்த 2 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297605®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2297856)
आगंतुक पटल : 11