மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்க தேசிய வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 3:51PM by PIB Chennai
தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரைகளின்படி, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுமம் அடிப்படை நிலைக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2022, பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு 2023 ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. இவை பல்வேறு நிலைகள், பாடங்களுக்கான பாடத்திட்ட இலக்குகள் திறன்கள், கற்றல் விளைவுகள், பாடத்திட்ட விவரங்கள், பாடப்புத்தகங்கள், கற்பிக்கும் வகைகள், மதிப்பீடு ஆகியவற்றிற்கு அடிப்படையாக உள்ளன.
தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்க தேசிய வழிகாட்டுதல் குழு உருவாக்கப்பட்டது. இக்குழு ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள், கல்வி அறிவு பெற்றோர், கல்வி அறிவு பெறாதோர், பாட நிபுணர்கள், அறிஞர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெறும் அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. இதற்கென மின்னணு முறைகளில் பெரும் அளவிலான பொது கலந்தாய்வு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. தேசிய அளவில் குடிமக்கள் சார்ந்த செயலி வாயிலாக மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட 13 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆர்வமுடையவர்களும், மாநில அளவில் செயலி ஆய்வுகள் மூலம் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களும் இதில் பங்களித்தனர்.
இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் சௌத்ரி மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297094®=3&lang=1
***
SS/IR/GS/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2297316)
வருகையாளர் எண்ணிக்கை : 35