நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டத்தின் இணையதள பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது – மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்
இடுகை இடப்பட்ட நாள்:
10 AUG 2026 1:15PM by PIB Chennai
என்ஒய்பிஎஸ் 2.0 என்று அழைக்கப்படும் தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட இணையதள பதிப்பை நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் 2024 செப்டம்பர் 11 அன்று அறிமுகப்படுத்தியது. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் மட்டும் அணுகுவதற்கான முந்தைய பதிப்பைப்போல் இன்றி, நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், குழுமங்கள், குடிமக்கள் ஆகியோரும் அணுகக்கூடிய வகையில் இது அமைத்துள்ளது. இது தொடங்கப்பட்டது முதல், இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், குழுமங்கள், தனிநபர் பதிவுகள், நடத்தப்பட்ட கூட்டங்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பல்வேறு அமைச்சகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 42 ஆலோசனைக் குழுக்களின் விவரங்கள் நாடாளுமன்ற விவகார அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு மேலாண்மை முறை இணையதளத்தில் (https://oams.nic.in/ccms/index.aspx) உள்ளன. இது எளிதில் அணுகக்கூடிய ஆவணமாகும்.
தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டத்தின் இணையதள பயன்பாட்டை எடுத்துச் செல்லும் வகையில் அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள், மாநில, யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள், பல்வேறு கல்வி வாரியங்கள் (சிபிஎஸ்இ, சிஐஎஸ்சிஇ) ஆகியோருக்கு அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அத்துடன், நாடாளுமன்ற தொலைக்காட்சி மூலமும் அவ்வப்போது விழிப்புணர்வுக் காணொளி ஒளிபரப்பப்படுகிறது. தேவைக்கேற்ப ஆலோசனைக்குழு மேலாண்மை முறை இணையதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது.
இத்தகவலை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297008®=3&lang=1
***
SS/IR/GS/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2297070)
வருகையாளர் எண்ணிக்கை : 42