உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் உள்ள பெயர்களைக் கொண்டு, அருணாச்சலப் பிரதேசத்தின் 27 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 5:35PM by PIB Chennai

இந்திய நில அளவைத் துறையின் அதிகாரப்பூர்வ வரைபடங்களில் உள்ள இடங்கள் மற்றும் நிலப்பகுதிகளுக்கான நிலையான பெயர்களைக் கொண்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 27 இடங்களை அருணாச்சலப் பிரதேச மாநில அரசுடன் கலந்தாலோசித்து, மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது. இந்திய நில அளவைத் துறையின் அருணாச்சலப் பிரதேச வரைபடத்தில் இவற்றை முறைப்படி அடையாளம் காண்பதன் நோக்கம், பொதுமக்களிடையே இவை குறித்த துல்லியமான புரிதலையும் சிறந்த விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாகும்.

கூடுதல் இடங்கள் அல்லது அம்சங்களுடன் கூடிய அருணாச்சலப் பிரதேசத்தின் வரைபடத்தை https://surveyofindia.gov.in/pages/state-maps  என்ற இணையதளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296151&reg=3&lang=1

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296914) வருகையாளர் எண்ணிக்கை : 37
இந்த வெளியீட்டை படிக்க: English , Khasi , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Kannada , Malayalam