சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
டிஏபிஎஸ்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிப் பயன்பாடு தொடர்பான கண்காணிப்பை அரசு பலப்படுத்துகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
09 AUG 2026 12:53PM by PIB Chennai
முன்னர் பட்டியல் வகுப்பினருக்கான துணைத் திட்டம் என அழைக்கப்பட்ட, பட்டியல் வகுப்பினருக்கான மேம்பாட்டு செயல் திட்டம் எனப்படும் டிஏபிஎஸ்சி (DAPSC) திட்டம், நித்தி ஆயோக் வழிகாட்டுதல்களின்படி, ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சமூக நீதி & அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதாவலே இந்த விவரங்களைத் தெரிவித்தார.
திருத்தப்பட்ட மதிப்பீடுகளின் பயன்பாடு 2020-21-ல் 81.61 சதவீதமாகவும், 2021-22-ல் 91.22 சதவீதமாகவும், 2022-23-ல் 91.90 சதவீதமாகவும், 2023-24-ல் 93.83 சதவீதமாகவும், 2024-25-ல் 92.57 சதவீதமாகவும், 2025-26-ல் 85.65 சதவீதமாகவும் இருந்தது.
இந்த நிதி பட்டியல் வகுப்பினரின் நலனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்று அரசு கூறியுள்ளது.
பட்டியல் வகுப்பினரின் மேம்பாட்டிற்காக டிஏபிஎஸ்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதி உகந்த முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அரசு கண்காணிப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296754®=3&lang=1
****
TV/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2296786)
வருகையாளர் எண்ணிக்கை : 58