ரெயில்வே அமைச்சகம்
சித்திரகூட்டிற்கான நேரடி இணைப்பை வலுப்படுத்தும் வகையில், சித்திரகூட்தாம் கார்வி - கான்பூர் சென்ட்ரல், பிரதாப்கர் - கான்பூர் சென்ட்ரல் விரைவு சேவைகளை இணைப்பதற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது
प्रविष्टि तिथि:
08 AUG 2026 4:49PM by PIB Chennai
பயணிகளின் வசதியை மேம்படுத்துவதற்கும், ரயில் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக ரயில்வே, 14109/14110 சித்ரகூட் கார்வி-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், 14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-கான்பூர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றை இணைத்து, 14123/14124 மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர்-சித்ரகுத்தம் கார்வி எக்ஸ்பிரஸ் என இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இணைப்பு, மா பெல்ஹா தேவி தாம் பிரதாப்கர், சித்திரகூட் தாம் கார்வி ஆகியவற்றுக்கு இடையேயான நேரடி இணைப்பை மேம்படுத்துவதோடு, கான்பூர் சென்ட்ரல், லக்னோ பகுதி, சித்திரகூட் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு இடையேயான இணைப்பையும் வலுப்படுத்தும்.
இந்த இணைப்பின் செயல்பாட்டுப் பலன்களின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள 12 பெட்டிகள் கொண்ட சேவையானது 24 பெட்டிகளாக அதிகரிக்கப்படுவதால், ஒருங்கிணைந்த சேவையின் திறன் மேம்படும். இது இருக்கை வசதியை கணிசமாக அதிகரிப்பதோடு, கான்பூர்-பிரதாப்கர் வழித்தடத்தில் நிலவும் நெரிசலைச் சமாளிக்கவும் உதவும்.
இந்த மேம்படுத்தப்பட்ட கொள்ளளவு, கான்பூர், பண்டா, சித்ரகூட், பிரதாப்கர் வழித்தடங்களில் உள்ள பிற நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் பயணிகளுக்கு மிகுந்த வசதியை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296554®=3&lang=1
****
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2296671)
आगंतुक पटल : 5