வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானா முதல் முறையாக, பீகாரிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு, கடல் வழியாக ஏற்றுமதியாகிறது
प्रविष्टि तिथि:
08 AUG 2026 2:53PM by PIB Chennai
வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், பீகார் மாநிலம் பிஹ்தாவில் உள்ள பிஐஏடிஏ தொழிற் பேட்டையிலிருந்து, ஆஸ்திரேலியாவிற்கு, 18 மெட்ரிக் டன் எடை கொண்ட புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானாவை, முதல் முறையாக வர்த்தக ரீதியில், கடல்வழியாக ஏற்றுமதி செய்துள்ளது. தர்பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த மக்கானா பயிரிடும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஏற்றுமதி சார்ந்த சந்தை வாய்ப்புகள் மூலம், விவசாயிகளுக்கு வருமானத்தை அதிகரிப்பதுடன், அம்மாநிலத்தின் முக்கிய புவிசார் குறியீடு கொண்ட தயாரிப்பிற்கான, சர்வதேச சந்தை வாய்ப்புகளையும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏற்றுமதியை பீகார் மாநில வேளாண் அமைச்சர் திரு விஜய் குமார் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பீகார் மாநில தோட்டக்கலைத் துறை இயக்குனர், வேளாண், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள், ஏற்றுமதியாளர் பிரதிநிதிகள், சரக்குப் போக்குவரத்து பிரதிநிதிகள், அப்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு மக்கானா விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முயற்சி, தற்போதைய சந்தை விலையை விட, 18 சதவீதம் கூடுதல் வருமானத்தை விவசாயிகள் பெற வழிவகுத்துள்ளது. இது ஏற்றுமதி சார்ந்த மதிப்புச் சங்கிலிகள், நேரடி சந்தை வாய்ப்புக்கள் நன்மைகளை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இந்த ஏற்றுமதி, புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானாவின் சர்வதேச சந்தை வாய்ப்புக்களை வலுப்படுத்தும் என்றும், அம்மாநிலத்தின் மக்கானா உற்பத்திக்கு நிலையான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் என்றும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296498®=3&lang=1
***
(Release ID: 2296498)
TV/SV/RJ
(रिलीज़ आईडी: 2296567)
आगंतुक पटल : 14