மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய மாணவர்களுக்கான ஆவணச் சரிபார்ப்பை விரைவுபடுத்த ஏதுவாக, டிஜிலாக்கர் - ஆஸ்திரேலிய கல்விப் பிரதிநிதிகள் சங்கம் இணைந்து மேற்கொள்ளும், நடவடிக்கை

प्रविष्टि तिथि: 08 AUG 2026 10:48AM by PIB Chennai

வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்குப் பெரிதும் பயனளிக்கும் வகையில், மத்திய மின்னணுவியல், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய மின் ஆளுகைப் பிரிவு, ஆவண சரிபார்ப்பு சேவையைத் தொடங்க, இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலியக் கல்விப் பிரதிநிதிகள் சங்கத்துடன் இணைந்து செயல்படவுள்ளது.

டிஜிலாக்கர் செயலியுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் தளம், ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வி, அடையாளம், நிதி சார்ந்த ஆவணங்களை, பாதுகாப்பான, காகிதப் பயன்பாடற்ற முறையில், சம்பந்தப்பட்ட மாணவரின் ஒப்புதலுடன் சரிபார்க்க உதவிடும். இந்த டிஜிட்டல் தளம் 2026 ஆகஸ்ட் 7 அன்று, புதுதில்லியில் நடைபெற்ற ஆஸ்திரேலியக் கல்விப் பிரதிநிதிகள் சங்கத்தின் வருடாந்திர மாநாட்டின் போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தேசிய மின் ஆளுகைப் பிரிவுடன் இணைந்து, ஆஸ்திரேலியக் கல்விப் பிரதிநிதிகள் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்த ஆவண சரிபார்ப்பு நடைமுறை, ஆஸ்திரேலிய உயர்கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் தகுதிச் சான்றுகளைச் சரிபார்க்கும் செயல்முறையை எளிதாக்க வடிவமைக்கப்பட்ட, நம்பகமான அமைப்பினால் சரிபார்க்கப்பட்ட ஒரு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளத் தளமாகும். இதன் மூலம், மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட, ஆவணத்தை வழங்கியவர்களால் சரிபார்க்கப்பட்ட, டிஜிட்டல் ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பகிர முடியும்; இது காகித வடிவிலான ஆவணங்கள், நேரடிச் சரிபார்ப்பு நடைமுறைகள் மீதான தேவையை வெகுவாகக் குறைக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் செயல்முறை, காலதாமதமான,  நேரடி ஆவணச் சரிபார்ப்பு முறைக்கு மாற்றாக, இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்ட பாதுகாப்பான கட்டமைப்பை வழங்குகிறது:

நிலை 1: மாணவர் சரிபார்ப்பு – பல்கலைக்கழக விண்ணப்ப செயல்முறை தொடங்குவதற்கு முன்பே இது தடையின்றி மேற்கொள்ளப்படுகிறது.

நிலை 2: நிதியுதவியாளர் சரிபார்ப்பு – மாணவர் சேர்க்கைக்கான வாய்ப்பைப் பெற்ற உடனேயே, நிதியாதாரத்தின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க இந்த நடைமுறை தொடங்கப்படுகிறது.

மாணவரின் தெளிவான ஒப்புதலுடன், அசல் ஆவணங்களை வழங்கிய அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட பதிவுகளை, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் நேரடியாக அணுக டிஜிலாக்கர் செயலி வழிவகுக்கும். இது மோசடி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் அபாயத்தை நீக்குவதுடன், முழுமையான தரவுப் பாதுகாப்பை உறுதிசெய்து, விண்ணப்பச் செயலாக்க நேரத்தையும் வெகுவாகக் குறைக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296443&reg=3&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2296512) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam