PIB Backgrounder
azadi ka amrit mahotsav

இந்திய நீதித்துறையின் டிஜிட்டல் மாற்றம்: இணையவழி நீதிமன்றங்கள் மூலம் விரைவான, வெளிப்படையான நீதி சேவை

प्रविष्टि तिथि: 07 AUG 2026 12:32PM by PIB Chennai

இந்திய நீதித்துறையை டிஜிட்டல் முறைக்கு மாற்றும் நோக்கில் தொடங்கப்பட்ட இணையவழி நீதிமன்றங்கள் திட்டம், காகிதம் சார்ந்த வழக்கமான நடைமுறைகளை மாற்றி அதிநவீனத் தொழில்நுட்பம் சார்ந்த நீதி விநியோகக் கட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. 2014-ம் ஆண்டு முதல், வழக்கு தாக்கல் செய்வதும், தீர்வு பெறுவதும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளன. 753 கோடிக்கும் அதிகமான நீதிமன்ற ஆவணப் பக்கங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான இ-சேவை மையங்கள் மூலம் நீதித்துறை சேவைகள் சாமானிய மக்களுக்கும் எளிதில் சென்று சேர்கின்றன.

2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், நீதிமன்ற நடைமுறைகளை விரைவுபடுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் பெருமளவில் உதவி வருகிறது. முதற்கட்டமாக 14,000-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் கணினிமயமாக்கப்பட்டன. இரண்டாம் கட்டத்தில் தேசிய நீதித்துறை தரவு தளம், இணையவழித் தாக்கல், காணொலி வாயிலான விசாரணை வசதிகள் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது மூன்றாம் கட்டத்தில்  வழக்கு தாக்கலில் பிழைகளைக் கண்டறிதல், வழக்கு ஆய்வுகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்குச் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் (ML) தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இணையவழித் தாக்கல் முறை மூலம் வழக்கறிஞர்களும் மனுதாரர்களும் நேரில் வராமலேயே மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும். இதன் மூலம் 1.25 கோடிக்கும் அதிகமான வழக்குகள் இணையவழியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. காணொலி காட்சி வசதி 7,553 வளாகங்களில் ஏற்படுத்தப்பட்டு, 4.18 கோடிக்கும் அதிகமான வழக்குகளில் இணையவழியில் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. காவல் துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், தடயவியல் ஆய்வகங்களை ஒருங்கிணைக்கும் பரஸ்பர குற்றவியல் நீதி அமைப்பு மூலம் தகவல்கள் உடனுக்குடன் பரிமாறப்படுகின்றன.

இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் வழக்கு நிலை, விசாரணை தேதிகளைத் தெரிந்துகொள்ளவும், சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பம் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழ் உட்பட 18 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. இத்தகைய சீர்திருத்தங்கள் மூலம் நீதி சேவை விரைவாகவும், குறைந்த செலவிலும், வெளிப்படையாகவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295880&reg=3&lang=1  

***

TV/PD/RJ


(रिलीज़ आईडी: 2296207) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Gujarati