ரெயில்வே அமைச்சகம்
ரயில்வே உணவின் தரம் மற்றும் சுகாதாரம் விதிமீறிய ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை
प्रविष्टि तिथि:
07 AUG 2026 3:06PM by PIB Chennai
ரயில்வேயில் ஆண்டிற்கு சுமார் 58 கோடி உணவுகள் வழங்கப்படுகின்றன. இதில் உணவுத் தரம் தொடர்பான புகார்கள் மிகக் குறைவாகவே வருகின்றன. இருப்பினும், கடந்த மூன்று ஆண்டுகளில் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், விதிமீறிய உணவு ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.5.13 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 54 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டு, 6 ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, சம்பந்தப்பட்டவர்கள் கருப்புப் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
உணவுத் தரத்தை உறுதி செய்யச் சமையலறைகளில் சிசிடிவி கேமராக்கள், தரமான மூலப்பொருட்கள் பயன்பாடு, கியூ ஆர் கோடு வசதி கொண்ட உணவுப் பொட்டலங்கள், உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளின் திடீர் ஆய்வுகள் மற்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய சான்றிதழ் கட்டாயமாக்கல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295949®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2296068)
आगंतुक पटल : 19