ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில்வே சரக்கு சேவை: வரலாறு காணாத வளர்ச்சி மற்றும் புதிய திட்டங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 3:04PM by PIB Chennai

ரயில்வே சரக்குப் போக்குவரத்தை வலுப்படுத்தவும், பிராந்திய இணைப்பை மேம்படுத்தவும் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, ரயில்வேயின் சரக்கு கையாளும் திறன் 2014-15 ஆம் ஆண்டில் 1,098 மில்லியன் டன்னாக இருந்தது, 2025-26 ஆம் ஆண்டில் 1,670 மில்லியன் டன்னாக கணிசமாக உயர்ந்துள்ளது.

சரக்குக் கையாளும் திறனை உயர்த்த 'கதி சக்தி  பல்நோக்கு மாதிரி சரக்கு பெட்டக முனைய' கொள்கையின் கீழ் தனியார் முதலீடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதன் மூலம் இதுவரை 142 முனையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதுடன், சுமார் 10,000 கோடி ரூபாய் தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

மேலும், சிமெண்ட், நிலக்கரி, எஃகு போன்ற குறிப்பிட்ட பொருட்களை விரைவாகக் கொண்டு செல்ல தனியாரின் சரக்குப் பெட்டி முதலீட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று பொருட்களைப் பெற்று விநியோகிக்கும் 'வீடு தேடி பார்சல் சேவை'  இந்திய அஞ்சல் துறை மற்றும் கான்கர் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295944&reg=3&lang=1  

***

TV/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2296059) வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada