குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத்தலைவர், ஆகஸ்ட் 8-9 தேதிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

प्रविष्टि तिथि: 07 AUG 2026 3:10PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன், 2026 ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஆகஸ்ட் 8 அன்று, அவர் ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள செல்லுலார் சிறை தேசிய நினைவிடத்தைப் பார்வையிடுவார். அங்கு அவர் தியாகிகள் தூணில் அஞ்சலி செலுத்துவதுடன், 'சுதந்திர சுடருக்குமரியாதை செலுத்தி, வீர சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையையும் பார்வையிடுவார். பின்னர், இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வரலாறு மற்றும் துணிச்சலான சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகங்களை விவரிக்கும் ஒளி-ஒலி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்வார்.

ஆகஸ்ட் 9 அன்று, ஸ்ரீ விஜயபுரத்தில் உள்ள 'ஃபிளாக் பாயிண்ட்' பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி, 'இல்லந்தோறும் மூவண்ணக் கோடி’  இயக்கத்தில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பார். அதைத் தொடர்ந்து, டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் தொழில்நுட்பக் கழக அரங்கில் நடைபெறும் "வந்தே மாதரம் - திரங்கா இசை நிகழ்ச்சி" என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்வார்.

பிற்பகலில், குடியரசு துணைத்தலைவர், வரலாற்றுச் சிறப்புமிக்க நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவுக்குச் பயணிக்க உள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295956&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2296052) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam