வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இயற்கை தயாரிப்புகளை ஊக்குவித்து, உலகளாவிய சந்தை அணுகலை விரிவாக்கும் வேளாண் கண்காட்சி
प्रविष्टि तिथि:
06 AUG 2026 10:10PM by PIB Chennai
மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையம், நுர்ன்பெர்க் மெஸ்ஸே இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ‘பயோஃபேக் இந்தியா 2026’ இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சியை கிரேட்டர் நொய்டாவில் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நடத்துகிறது.
இக்கண்காட்சியில் தமிழ்நாடும் உட்பட பல மாநிலங்களைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன. இதில் தானியங்கள், சிறுதானியங்கள், தேயிலை, மூலிகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட இயற்கை உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய இயற்கை பொருட்களின் சர்வதேச ஏற்றுமதியை அதிகரிக்கத் தைவான், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 13 நாடுகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட சர்வதேச நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியையொட்டி வணிகச் சந்திப்புகள், தொழில்நுட்ப மாநாடுகள் மற்றும் இயற்கைச் சான்றிதழ் குறித்த கருத்தரங்குகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இக்கண்காட்சி இந்திய விவசாயிகளின் வருவாயை உயர்த்தவும், உலகளவில் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவாக்கவும் பெரிதும் உதவும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295816®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2295933)
आगंतुक पटल : 4