கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவு அடிப்படையிலான இயற்கை விவசாய ஊக்குவிப்பு
प्रविष्टि तिथि:
04 AUG 2026 5:15PM by PIB Chennai
மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் சார்பில் 2015-16 ஆம் ஆண்டு முதல் பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்புத் தொடர் மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களின் மூலம் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இயற்கை விவசாயக் குழுக்கள் உருவாக்கப்பட்டு உற்பத்தி, பதப்படுத்துதல், சான்றளித்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் வரை முழுமையான உதவிகள் வழங்கப்படுகின்றன.
பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஒரு ஹெக்டேருக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.31,500 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் இயற்கை உரங்கள் மற்றும் பிற உள்ளீடுகளுக்காக ரூ.15,000 நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது என்று மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294368®=3&lang=1
***
TV/VK/SE
(रिलीज़ आईडी: 2295820)
आगंतुक पटल : 6