விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இழப்பீடுகள்

प्रविष्टि तिथि: 04 AUG 2026 6:15PM by PIB Chennai

பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17 முதல் நாட்டில் உள்ள மாநிலங்களுக்கும் விவசாயிகளுக்கும் விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் மூலம் விதைப்புக்கு முந்தைய காலம் முதல் அறுவடைக்குப் பிந்தைய காலம் வரை தவிர்க்க முடியாத இயற்கை அபாயங்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு முழுமையான காப்பீடு வழங்கப்படுகிறது.

முன்பு காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதங்களுக்குக் காப்பீடு வழங்கப்படாத நிலையில், தற்போது மாநில அரசின் செலவில் கூடுதல் கவரேஜாக தனிநபர் மதிப்பீட்டின் அடிப்படையில் அதைச் சேர்க்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், நெல், கரும்பு, சணல் போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்களைத் தவிர, பிற பயிர்களுக்கு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலம் நீரில் மூழ்குதல் (Inundation) போன்ற பாதிப்புகளுக்கும் காப்பீடு வழங்கப்படுவதாக மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் திரு. ராம்நாத் தாக்கூர் மக்களவையில் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294455&reg=3&lang=1    

***

 TV/VK/SE


(रिलीज़ आईडी: 2295812) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu