மக்களவை செயலகம்
டாக்டர் ஜி.எஸ். தில்லான் பிறந்த தினத்தையொட்டி மக்களவைத் தலைவர் மரியாதைச் செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 AUG 2026 4:25PM by PIB Chennai
மக்களவையின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜி.எஸ். தில்லான் பிறந்த தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது உருவப்படத்திற்கு மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்.
மாநிலங்கவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள், மக்களவை செயலாளர் திரு உத்பல் குமார் சிங் உள்ளிட்டோரும் டாக்டர் தில்லான் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைச் செலுத்தினார்கள்.
டாக்டர் தில்லான் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். 1967-ம் ஆண்டு தாரா தரன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1969-ம் ஆண்டு ஆகஸ்ட் 8 அன்று நான்காவது மக்களவையின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1971-ம் ஆண்டு மார்ச் 22 அன்று ஐந்தாவது மக்களவையில் மீண்டும் மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295499®=3&lang=1
***
TV/IR/SM/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2295730)
வருகையாளர் எண்ணிக்கை : 51