ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார திட்டத்தால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு

प्रविष्टि तिथि: 04 AUG 2026 4:25PM by PIB Chennai

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாக, குடும்பத்திற்கு ஆண்டுக்கு 125 நாட்கள் கட்டாய வேலைவாய்ப்பு வழங்கும் 'வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான ஊரக வாழ்வாதார சட்டம் 2025, நாடு முழுவதும் 2026 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவுக்கு முதற்கட்டமாக ரூ.1,459.92 கோடியும், மத்தியப் பிரதேசத்திற்கு ரூ.630.76 கோடியும் மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. நிலைத்தன்மை கொண்ட கிராமப்புறக் கட்டமைப்புகள், நீர்நிலைப் பணிகள் மற்றும் தீவிர வானிலை பாதிப்புகளைத் தடுக்கும் பணிகள் மூலம் வாழ்வாதாரத்தைப் பெருக்குவதே இதன் நோக்கமாகும்.

மேலும், கிராமப்புற வறுமை ஓழிப்பு மற்றும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்' மூலம் 10.08 கோடி குடும்பங்கள் 92 லட்சம் சுயஉதவிக் குழுக்களாகத் திரட்டப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு சுழல் நிதி, சமுதாய முதலீட்டு நிதி மற்றும் குறைந்த வட்டியில் ரூ.13.41 லட்சம் கோடி அளவுக்கு வங்கிக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் திரு. கமலேஷ் பாஸ்வான் மக்களவையில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294301&reg=3&lang=1   

***

 

TV/VK/SE


(रिलीज़ आईडी: 2295707) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Telugu