தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம்
प्रविष्टि तिथि:
06 AUG 2026 4:46PM by PIB Chennai
தில்லி முதன்மைத் தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் திருமதி ஆஷா ராணி ரூங்டா தலைமையில், 2026-27-ம் நிதியாண்டின், இரண்டாவது காலாண்டிற்கான ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் ஆகஸ்ட் 6, 2026 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. அவருடன் தில்லி, தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் திரு உதய் பான் திவாரி, தில்லி, இணை தகவல் தொடர்பு கணக்கு கட்டுப்பாட்டாளர் திருமதி சுஷ்மா நேகி, திரு ரஜத் திரிபாதி ஆகியோரும் கலந்துகொண்டனர். பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், தொலைத்தொடர்புத் துறை ஓய்வூதியதாரர்களின் குறைகள், ஓய்வூதியம் வழங்குதல், ஓய்வூதியத்தை மாற்றுதல், பிற பலன்கள் தொடர்பான சிக்கல்கள் உட்பட, பல்வேறு குறைகளுக்குத் தீர்வு காணப்பட்டன.
ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளைக் கையாள்வதற்கு, இந்த ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் சிறந்த தளத்தை வழங்கியுள்ளது. ஓய்வூதிய அங்கீகாரம், திருத்தம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வூதியம் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன.
இது போன்ற முன்முயற்சிகள், உரிய நேரத்தில் குறைகளுக்குத் தீர்வு காண்பதையும், மக்களை மையமாகக் கொண்ட ஓய்வூதிய சேவைகளை வழங்குவதையும் உறுதி செய்வதில் தில்லி முதன்மை பட்டயக் கணக்காளர் கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295538®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2295705)
आगंतुक पटल : 8