கனரகத் தொழில்கள் அமைச்சகம்
தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கு, உலகின் உற்பத்தி மையமாக இந்தியா திகழ வேண்டும்: மத்திய அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி
प्रविष्टि तिथि:
06 AUG 2026 3:07PM by PIB Chennai
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு என்பது அடிப்படையான மாற்றத்திற்கு உட்பட்டது என்று மத்திய எஃகு, கனரகத் தொழில்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற 7-வது சிஐஐ சர்வதேச எரிசக்தி மாநாடு, கண்காட்சியின் ஒரு பகுதியாக, எரிசக்தி பாதுகாப்பு, விநியோக நடைமுறைகள் குறித்த சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
விரைவாக மாறிவரும் இன்றைய புவிசார் சூழலில், வலிமையான நாடாக திகழ்வதற்கு, எரிசக்தி வளங்களை பயன்படுத்தும் திறனுடன், எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்கான உற்பத்தி, புத்தாக்கம், வலுவான விநியோகக் கட்டமைப்புக்களை உருவாக்கும் திறன் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தூய்மையான எரிசக்தி உற்பத்தி சார்ந்த தொழில்நுட்பங்களுகும் உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுப்பதற்கான உத்தியை விரிவாக எடுத்துரைத்தார். மேலும், தொழில்துறை திறன், எரிசக்தி பாதுகாப்பு ஆகியவை தற்போது பிரிக்க முடியாதவையாக உள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
அண்மையில், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நிகழ்வுகள், விநியோகச் சங்கிலியில் ஏற்படுத்தியுள்ளத் தடைகள், முக்கிய கனிமங்களுக்கான அதிகரித்து வரும் போட்டி ஆகியவை, உலக அரங்கில் தொழில்துறை சார்ந்த முன்னுரிமைகளை மாற்றியமைத்துள்ளன என்றும், இதனால் உற்பத்தித் திறன், தொழில்நுட்ப வலிமை ஆகியவை நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பின் மையமாக மாறியுள்ளன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295437®=3&lang=1
***
TV/SV/SE
(रिलीज़ आईडी: 2295665)
आगंतुक पटल : 7