நிதி அமைச்சகம்
மத்திய அரசின் கணக்குகள் குறித்த மாதாந்திர ஆய்வறிக்கை
प्रविष्टि तिथि:
05 AUG 2026 4:34PM by PIB Chennai
மத்திய அரசின் கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
2026 ஜூன் மாதம் வரை, மத்திய அரசு மொத்தம் ரூ.10,49,243 கோடி அளவிற்கு வருவாய் (இது 2026-27-ம் நிதியாண்டிற்கான மொத்த வருவாய் குறித்த மதிப்பீட்டில் 28.7% ஆகும்) ஈட்டியுள்ளது. இதில் ரூ.6,36,576 கோடி வரி வருவாயாகவும் (மத்திய அரசின் நிகர பங்குத் தொகை), ரூ.3,77,664 கோடி வரி அல்லாத வருவாயாகவும் உள்ளது. ரூ.35,003 கோடி கடன் அல்லாத மூலதன வரவுகளும் இதில் அடங்கும். இந்த காலகட்டத்தில், வரிப் பகிர்வின் ஒரு பகுதியாக, மாநில அரசுகளுக்கு மத்திய அரசால் ரூ.2,63,336 கோடி விடுக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.63,605 கோடி குறைவாகும்.
மத்திய அரசு மொத்த செலவினத் தொகை ரூ.13,57,076 கோடியாக (இது 2026-27-ம் நிதியாண்டிற்கான மதிப்பீட்டில் 25.4% ஆகும்) உள்ளது. இதில் ரூ.10,16,818 கோடி வருவாய் செலவீனமாகவும், ரூ.3,40,258 கோடி மூலதன கணக்கிலும் செலவிடப்பட்டுள்ளது. மொத்த வருவாய் செலவினத்தில், ரூ.3,46,414 கோடி கடனுக்கான வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது. ரூ.1,14,812 கோடி முக்கியத் திட்டங்களின் மானியத் தொகைக்காக செலவிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294892®=3&lang=1
***
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295656)
आगंतुक पटल : 3