நிலக்கரி அமைச்சகம்
ஒடிசாவில் உள்ள கோல் இந்தியா நிறுவனத்தின் புவனேஸ்வரி சுரங்கம் நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது
प्रविष्टि तिथि:
06 AUG 2026 2:34PM by PIB Chennai
உலகளவில் பொருளாதார வல்லரசு நாடாக உருவெடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தின் புவனேஸ்வரி திறந்தவெளிச் சுரங்கத் திட்டம், உற்பத்தித் திறன், தொழில்நுட்பம், நிலைத்தன்மை ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. ஒடிசாவின் நிலக்கரி வளம் மிக்க தல்ச்சர் பகுதியில் அமைந்துள்ள புவனேஸ்வரியில் உள்ள நிலக்கரிச் சுரங்கம், கோல் இந்தியா நிறுவனத்தின் மிகவும் மேம்பட்ட, அதிக உற்பத்தித் திறன் கொண்ட திறந்தவெளிச் சுரங்கங்களில் ஒன்றாகத் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது.
ஆண்டுதோறும் 30 மில்லியன் டன் என்ற முழுமையான உற்பத்தித் திறனுடன் செயல்படும் இந்தச் சுரங்கம், தற்போது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான வீடுகளுக்கும், தொழில்துறைகளுக்கும் மின்சாரம் வழங்கும், முக்கியதத்துவம் வாய்ந்த அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரியை விநியோகித்து வருகிறது.
புவனேஸ்வரி சுரங்கத்தின் செயல்பாட்டுச் சாதனைகள், அதன் துல்லியமான திட்டமிடல், சீரான செயல்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளன. 2025–26-ம் நிதியாண்டில், 25 மில்லியன் டன் என்ற வருடாந்திர திட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தச் சுரங்கம் 26.477 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்து, 105.98 சதவீதத்தை எட்டியது. இது இந்தியாவின் எரிசக்தித் துறையில், அதன் நீடித்த பங்களிப்பை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
2026–27-ம் நிதியாண்டிலும், உற்பத்தியில் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் உற்பத்தி இலக்கு 28 மில்லியன் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல் காலாண்டில், இந்தச் சுரங்கம் 7.62 மில்லியன் டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295419®=3&lang=1
***
VJ/SV/SH
(रिलीज़ आईडी: 2295512)
आगंतुक पटल : 9