மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போலியான பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியீடு

இடுகை இடப்பட்ட நாள்: 05 AUG 2026 5:52PM by PIB Chennai

இந்தியாவில் போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலைப் பல்கலைக்கழக மானியக் குழு அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2026 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட அண்மைக்காலப் பட்டியலின்படி, நாடு முழுவதும் 32 நிறுவனங்கள் போலியான பல்கலைக்கழகங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

இப்பட்டியல் பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (www.ugc.gov.in) பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கிறது. இத்தகைய போலியான பல்கலைக்கழகங்கள் குறித்து மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பொது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் சட்ட விதிகளை மீறி இயங்கும் இத்தகைய போலி நிறுவனங்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கவும், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து அவற்றை மூடவும் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் கல்வித் துறைச் செயலாளர்களுக்கு மத்திய அரசும் பல்கலைக்கழக மானியக் குழுவும் கடிதம் எழுதியுள்ளன.

இத்தகவலை மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295012&reg=3&lang=1

****

TV/EA/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2295235) வருகையாளர் எண்ணிக்கை : 62
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Telugu