மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான சிறப்பு மையம்: சென்னை ஐஐடி-க்கு ரூ.43 கோடி நிதி ஒதுக்கீடு
प्रविष्टि तिथि:
05 AUG 2026 5:53PM by PIB Chennai
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவோம்; இந்தியாவிற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவோம்" என்ற தொலைநோக்குப் பார்வையின் கீழ் வேளாண்மை, நிலையான நகரங்கள் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்காக 3 செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையங்கள் (CoEs) ரூ.990 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளன. இவை முறையே ரோபர் ஐஐடி, கான்பூர் ஐஐடி மற்றும் பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றின் தலைமையில் செயல்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக, கல்வித் துறைக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் சென்னை ஐஐடி-யில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐஐடி-க்கு இதுவரை ரூ.43.00 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கான்பூர் ஐஐடி-க்கு ரூ.74.39 கோடியும், ரோபர் ஐஐடி-க்கு ரூ.62.64 கோடியும், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்திற்கு ரூ.69.07 கோடியும் நிதி அனுமதிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி-யில் அமைந்துள்ள கல்விக்கான செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம், இந்திய மொழிகளுக்கான தானியங்கி பேச்சு கண்டறிதல் (ASR), ஒளியியல் எழுத்து கண்டறிதல் (OCR), இயந்திர மொழிபெயர்ப்பு (MT) உள்ளிட்ட உயர்தர கணினி மாதிரிகளை உருவாக்கியுள்ளது.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இன்று மக்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2295017®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2295233)
आगंतुक पटल : 11