பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
வனவள மேம்பாட்டு மையங்களில் பழங்குடியினப் பெண்களின் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
05 AUG 2026 12:54PM by PIB Chennai
இயற்கை வளங்கள், சிறிய வகை வன விளைபொருட்கள், விவசாயம் சார்ந்த / சாராத பழங்குடியினத் தயாரிப்பு நிறுவனங்களை மிகவும் திறமையான, சமமான, சுய-நிர்வாக முறையிலான பயன்பாட்டின் மூலம், பழங்குடியின ஆண்கள், பெண்களுக்கான தொழில்முனைவு முயற்சிகளை வலுப்படுத்தவும் வாழ்வாதார வாய்ப்புகளை எளிதாக்கவும், மத்திய பழங்குடியின நலன் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கென இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவுச் சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு மூலம், இரண்டு திட்டங்களைச் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய பழங்குடியின விவகாரத் துறை இணையமைச்சர் திரு துர்காதாஸ் உய்கே இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.
பிரதமரின் பழங்குடியின மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், வனவள மேம்பாட்டு மையத்தில் தலா 20 பயனாளிகளைக் கொண்ட 15 சுயஉதவிக் குழுக்கள் இடம் பெற்றுள்ளன. அதே சமயம், ஒரு மையத்தில் தலா 10 பயனாளிகளைக் கொண்ட 5 சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், 28 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில், பழங்குடியினப் பெண்கள் உட்பட 12.48 லட்சம் பயனாளிகளை உள்ளடக்கிய 4,172 வனவள மேம்பாட்டு மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294711®=3&lang=1
(Release ID: 2294711)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2295101)
आगंतुक पटल : 6