உள்துறை அமைச்சகம்
புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிறப்பு விதிகள்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:26PM by PIB Chennai
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. புதிதாக அமல்படுத்தப்பட்ட 'பாரதிய நியாய சன்ஹிதா 2023' சட்டத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒரே அத்தியாயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இச்சட்டத்தில், 18 வயதிற்குட்பட்ட சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்திற்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், திருமண ஆசை காட்டி, வேலைவாய்ப்பு அல்லது பதவி உயர்வு தருவதாகக் கூறி அல்லது அடையாளத்தை மறைத்து ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது புதிய குற்றமாகக் சேர்க்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலங்களை ஆடியோ-வீடியோ வடிவில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பரிசோதனை அறிக்கையை 7 நாட்களுக்குள் புலனாய்வு அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவமனைகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இலவச முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதும் இச்சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. பண்டி சஞ்சய் குமார் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294238®=3&lang=1
****
TV/EA/SH
(रिलीज़ आईडी: 2294648)
आगंतुक पटल : 9