கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
'மாலுமிகளுக்கு முன்னுரிமை' முன்முயற்சி
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:39PM by PIB Chennai
உலகளாவிய கடல்சார் பணியாளர் தொகுப்பில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றும் இந்தியக் கடல்சார் பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது. ஈரான், ஹார்முஸ் நீரிணை, பாரசீக வளைகுடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் பாதுகாப்புச் சூழல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கடல்சார் நிர்வாக இயக்குநரகம் (DGMA), 'கடல்சார் பணியாளர்களுக்கே முன்னுரிமை' என்ற விரிவான செயல்முறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட அப்பகுதிகளில் இயங்கும் கப்பல்கள் மற்றும் கடல்சார் பணியாளர்கள் குறித்த நிகழ்நேரத் தகவல் அறிக்கை, இருப்பிடத்தைக் கண்டறிதல் மற்றும் கண்காணித்தல் ஆகியவற்றுக்கான நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வெளியுறவு அமைச்சகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் அறிவுறுத்தலின் பேரில், மறு உத்தரவு வரும் வரை ஈரானுக்கு இந்தியக் கப்பல் பணியாளர்களை அனுப்ப வேண்டாம் என்று அனைத்து பணியமர்த்தல் மற்றும் பணி நியமனச் சேவை உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் கப்பல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் அதிகரித்து வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியக் கப்பல் பணியாளர்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை சார்ந்தோருக்கு வழங்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்படி, ஈரானில் உள்ள இந்தியக் கப்பல் பணியாளர்கள் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் மாநிலங்களவையில் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294247®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294592)
आगंतुक पटल : 12