நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
அரசு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
प्रविष्टि तिथि:
04 AUG 2026 2:18PM by PIB Chennai
அரசு அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையங்களாக (GATC) இயங்குவதற்குத் தகுதியுள்ள தொழிற்துறைகள், ஆய்வகங்கள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழில்பயிற்சி நிலையங்களிடமிருந்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
விருப்பமுள்ள நிறுவனங்கள் emaap.gov.in/gatc என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 2026 ஆகஸ்ட் 17 முதல் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவு, கட்டணம் செலுத்துதல் மற்றும் தகவல்களைக் கண்காணித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முற்றிலும் டிஜிட்டல் முறையில் வெளிப்படைத்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எடை மற்றும் அளவீடுகளுக்கான சரிபார்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தவும், நுகர்வோருக்குத் துல்லியமான அளவீடுகளை உறுதி செய்யவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சமீபத்திய சட்டத் திருத்தங்களின்படி, மருத்துவக் கருவிகள், எரிசக்தி மீட்டர்கள், நீர் மீட்டர்கள், பெட்ரோல்-டீசல் மற்றும் சிஎன்ஜி விநியோகக் கருவிகள் உட்பட 23 வகையான எடைக் கருவிகளைப் பரிசோதிக்க இம்மையங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு இதுவரை 51 மையங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மாநிலச் சட்ட அளவியல் துறைகளின் பரிசோதனைப் பணிகளை மேலும் விரைவுபடுத்த இக்கட்டமைப்பு பெரிதும் துணைபுரியும். இது தொழில்துறையினருக்கான விதிமுறை இணக்க நடைமுறைகளை எளிதாக்குவதுடன், நுகர்வோர் நலன்களையும் முழுமையாகப் பாதுகாக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294205®=3&lang=1
****
TV/SE/SH
(रिलीज़ आईडी: 2294568)
आगंतुक पटल : 17