ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கைத்தறி நெசவாளர்களுக்கான நிதியுதவி

प्रविष्टि तिथि: 04 AUG 2026 1:42PM by PIB Chennai

தமிழ்நாட்டின் கைத்தறித் துறை வளர்ச்சிக்கும் நெசவாளர்களின் நலனுக்கும் மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சிறப்பு முன்னுரிமை அளித்து வருகிறது. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டம் (NHDP), மூலப்பொருட்கள் விநியோகத் திட்டம் (RMSS) ஆகியவற்றின் கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதிலும் உள்ள பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டங்களின் கீழ் தகுதியுள்ள முகமைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்கள், நவீன தறிகள், சூரிய ஒளி விளக்குகள், தறிக்கூடங்கள், திறன் மேம்பாடு மற்றும் நெசவாளர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் சலுகைக் கடன்கள் வழங்கப்படுகின்றன. தேசிய கைத்தறி வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் 343 நெசவாளர்கள் பயனடையும் வகையில் ரூ.78.31 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20 சிறு கைத்தறி தொகுப்புகளுக்கு ரூ.21.73 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,999 தொழிலாளர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. முத்ரா திட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 13,790 நெசவாளர்களுக்கு கடனுதவியும், மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டங்களில் 1.35 லட்சம் பயனாளிகளும் இணைக்கப்பட்டுள்ளனர். மானிய விலையில் 334.13 லட்சம் கிலோ நூல் தமிழ்நாட்டுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294194&reg=3&lang=1

****

TV/SE/SH

 


(रिलीज़ आईडी: 2294562) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR