ஆயுஷ்
ஆயுஷ் சேவைகளை ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களுடன் ஒருங்கிணைத்தல்
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:04PM by PIB Chennai
மத்திய நிதியுதவித் திட்டமான தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து அவற்றின் மாநில வருடாந்திர செயல்திட்டங்கள் வாயிலாகப் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், ஏற்கனவே செயல்பட்டு வந்த 12,500 ஆயுஷ் மருந்தகங்கள் மற்றும் துணை சுகாதார மையங்கள் ஆகியவை 'ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களாக' மேம்படுத்தப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. இவை, தற்போது 'ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் (ஆயுஷ்)' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஆயுஷ் மருந்தகங்களை ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களாக (ஆயுஷ்) மேம்படுத்துவதற்கு, ஒரு மருந்தகத்திற்கு ரூ.16.22 லட்சமும் ஒரு துணை மருத்துவ மையத்திற்கு ரூ.15.744 லட்சமும் நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்தம் உள்ள 12500 அங்கீகரிக்கப்பட்ட மற்றும் செயல்பாட்டில் உள்ள ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில், தமிழ்நாட்டில் 650 மையங்களும், புதுச்சேரியில் 4 மையங்களும் உள்ளன. மேலும், நாட்டில் ஆயுஷ் புறநோயாளிப் பிரிவு சேவைகளை வழங்கும் 3648 மருத்துவமனைகளும், 40269 மருந்தகங்களும் செயல்படுகின்றன. இவற்றில் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களின் எண்ணிக்கை முறையே 34 மற்றும் 1514 ஆகும். புதுச்சேரியில் 6 மருத்துவமனைகளும், 81 மருந்தகங்களும் இயங்குகின்றன.
மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294223®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294531)
आगंतुक पटल : 5