ஆயுஷ்
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், 2014-15 முதல் 2025-26 வரை தமிழ்நாட்டிற்கு ரூ. 30890.64 லட்சம் விடுவிப்பு
प्रविष्टि तिथि:
04 AUG 2026 3:03PM by PIB Chennai
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் தேசிய ஆயுஷ் இயக்கம் என்ற மத்திய நிதியுதவித் திட்டத்தை ஆயுஷ் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆயுஷ் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும், தேசிய ஆயுஷ் இயக்கத்தின் வழிகாட்டுதல்களின்படி மாநில வருடாந்திர செயல் திட்டங்கள் வாயிலாகப் பொருத்தமான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்து இந்த நிதியுதவியைப் பெறலாம்.
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ், வருடாந்திர செயல் திட்டங்கள் வாயிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், ஆயுஷ் உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட செயல்பாடுகளைச் செயல்படுத்த, 2014-15 முதல் 2025-26 வரையிலான காலத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் ரூ. 6,40,699.24 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 30890.64 லட்சமும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ. 3224.56 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய ஆயுஷ் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2294221®=3&lang=1
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2294506)
आगंतुक पटल : 15